உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் வாசவி ஹோண்டாவில் ஷைன்-100 டீலக்ஸ் பைக் அறிமுகம்

விழுப்புரம் வாசவி ஹோண்டாவில் ஷைன்-100 டீலக்ஸ் பைக் அறிமுகம்

விழுப்புரம்: விழுப்புரம் வாசவி ஹோண்டா ஷோரூமில் ஹோண்டா ஷைன்-100 டீலக்ஸ் புதிய பைக் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் சென்னை நெடுஞ்சாலை வாசவி ஹோண்டா ஷோரூமில் நடந்த நிகழ்ச்சியில் ஹோண்டா நிறுவனத்தின் ஷைன்-100 டீலக்ஸ் புதிய வாகனம் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வாசவி ஹோண்டா ஷோரூம் உரிமையாளர் ஜெயக்குமார், புதிய பைக்கை அறிமுகம் செய்து, விற்பனையை துவக்கி வைத்தார். ஷோரூம் விற்பனை மேலாளர் அகஸ்டின் ஜோசப் வரவேற்றார். ஸ்ரீராம் பைனான்ஸ் மண்டல மேலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சர்வீஸ் மேலாளளர் சதீஷ்குமார் நன்றி கூறினார். இந்த ஷோரூமில், ஷைன்-125, ஆக்டிவா ஸ்கூட்டர்கள், டியோ, யுனிகான் உள்ளிட்ட ஹோண்டா நிறுவன வாகனங்கள் விற்பனைக்கு உள்ளன. வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை