உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  எஸ்.ஐ.ஆர்., படிவம் பூர்த்தி செய்வதற்கான முகாம்

 எஸ்.ஐ.ஆர்., படிவம் பூர்த்தி செய்வதற்கான முகாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பூர்த்தி செய்வதற்கான 2 நாள் முகாம் நடக்கிறது. எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெளிவு பெறும் வகையில், வாக்காளர்களின் வசதிக்காக நாளை 22ம் தேதி, 23ம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மாவட்டத்தில் உள்ள 1,088 ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம், செஞ்சி சட்டசபை தொகுதியில், 167 ஓட்டுச்சாவடி மையங்களிலும், மயிலம் தொகுதியில் 182, திண்டிவனம் (தனி) தொகுதியில் 153, வானுார் (தனி) தொகுதியில் 162, விழுப்புரம் தொகுதியில் 148, விக்கிரவாண்டி தொகுதியில் 139, திருக்கோவிலுார் தொகுதியில் 137 உட்பட மொத்தம் 1,088 ஓட்டுச்சாவடிகளில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை