உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு சமூக நீதி முன்னணி தீர்மானம்

தேர்தலில் தி.மு.க.,விற்கு ஆதரவு சமூக நீதி முன்னணி தீர்மானம்

விழுப்புரம்: சமூக நீதி மக்கள் விடுதலை முன்னணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.நிறுவன தலைவர் வேலுமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் செல்வம், ராஜராஜசோழன் விவசாய சங்க மாநில துணைத் தலைவர் தேவராஜ், மாவட்ட அமைப்பாளர் பரணிதரன் முன்னிலை வகித்தனர்.விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கணேசன், உழவர் முன்னணி மாநிலச் செயலாளர் தெய்வீகதாஸ் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற ஆதரவு தெரிவிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட பொருளாளர் ஜெனிஷ், மகளிரணி தலைவி சரஸ்வதி, ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ