| ADDED : நவ 20, 2025 05:30 AM
விழுப்புரம்: விழுப்புரம் தி.மு.க., தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி இளைஞர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கி, ஆலோசனை வழங்கினார். இதில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவை தெற்கு மாவட்ட அனைத்து கிளைகளிலும் சிறப்பாக கொண்டாடுவது. எஸ்.ஐ.ஆர்., பணியில் விவரமாக செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அன்பு, பாலாஜி, மாணவர் அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.