உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோட்டக்குப்பத்தில் சிறப்பு முகாம்  

கோட்டக்குப்பத்தில் சிறப்பு முகாம்  

கோட்டக்குப்பம்; கோட்டக்குப்பத்தில் நாளை சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நகராட்சி ஆணையர் புகேந்திரி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட, 27 வார்டுகளிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை சேர்மன் ஜெயமூர்த்தி தலைமையில், 1 முதல் 3 வது வார்டு வரை பெரிய முதலியார் சாவடி அரசு நடுநிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது.தொடர்ந்து வரும் 24ம் தேதி 4, 5 வார்டுகளுக்கு, சின்ன முதலியார்சாவடி சமுதாய நலக்கூடத்தில் முகாம் நடைபெறுகிறது.இதில், நகராட்சியுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்துறை அலுவலர்களும் பங்கேற்று, மனுக்களை பெற உள்ளனர். பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை