உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் பேச்சுப்போட்டி

அரசு கல்லுாரியில் பேச்சுப்போட்டி

வானுார், - வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடந்தது.போட்டியை, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) வில்லியம் துவக்கி வைத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல் மற்றும் சமூக சாதனைகளை விளக்கிப் பேசினார். தமிழ்த் துறைத் தலைவர் இளங்கோ வரவேற்றார். ஆங்கில துறைத் தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி, வணிகவியல் துறைத் தலைவர் தேவநாதன் ஆகியோர் போட்டி நடுவர்களாக பங்கேற்றனர். உதவி பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்