உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மேற்கு சப்இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார், நேற்று நேருஜி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டி வந்த, வானூர் தாலுகா காட்ராம்பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை மகன் ஜெகநாதன்,21; என்பவரை பிடித்தனர். தொடர்ந்து, மேற்கு போலீசார் ஜெகநாதன் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை