உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் மாணவர்கள் வரவேற்பு விழா

 வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் மாணவர்கள் வரவேற்பு விழா

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூரில் உள்ள வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் அறிவியல் மற்றும் மனிதவியல் துறை சார்பில் 'இப்போரியா 25' தலைப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். அறிவியல் மற்றும் மனிதவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி தேவஸ்ரீ வரவேற்றார். முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகம் வேதியியல் துறை, தலைவர் கிருஷ்ணசாமி, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், அறிவியல் விஞ்ஞானி சிவன், நாராயணன், கூகுள் சி.இ.ஓ., சுந்தர்பிச்சை ஆகியோர் ஆரம்பத்தில் தங்களது வாழ்க்கையை சாதாரணமாக துவங்கி, பின்னாளில் உலகமே போற்றும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி கொண்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, நிர்வாக உறுப்பினர் நித்தின் சரவணன் செய்தார். மாணவி சுபஸ்ரீ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை