| ADDED : டிச 01, 2025 05:33 AM
செஞ்சி: அனந்தபுரம் கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். திருச்சிற்பம்பலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு மண்டல பாரம்பரிய லத்தி சாப்பியன்ஷிப் சார்பில் நடந்த சிலம்பம் போட்டிகளில் பனமலை - அனந்தபுரம் கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 30 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாணவர்கள் ஹரிஷ், சுஷில்ராஜ் முதல் பரிசும், ப்ரியஷினி, சுதர்சன், எழிலன், ரோகித், புகழேந்தி இரண்டாம் பரிசும், நிரஞ்சன், டைனீஷ், பாரத், நிலேஷ், வேல்முருகன், தருண், அக்ஷயா, குமரன் மூன்றாம் பரிசையும் வென்று சாதனை படைத்தனர். இவர்களை தாளாளர் சேகர், பள்ளி முதல்வர் சுஜாதா சேகர் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.