உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

வானுார்: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. கிளியனுார் முதல் நிலை ஊராட்சியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. எனவே கிளியனுார் உதவி மின் பகிர்மானத்தில் இருந்து தனியாக மின்மாற்றி அமைத்து தர வேண்டும், தேற்குணம், கூத்தப்பாக்கம் சாலை, கடை வீதிகளில் தெரு விளக்குகள் எரியவில்லை. அதனை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிளியனுார் கிளை சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி துவக்க உரையாற்றினார். மாநில பொதுசெயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், மாவட்ட தலைவர் சகாபுதீன், மாவட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியன், வட்டக்குழு துணை செயலாளர் தெய்வஜோதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி