உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  திண்டிவனம் நகர அ.தி.மு.க., செயலாளர் நியமனம்

 திண்டிவனம் நகர அ.தி.மு.க., செயலாளர் நியமனம்

திண்டிவனம்: திண்டிவனம் நகர அ.தி.மு.க.,செயலாளராக வழக்கறிஞர் ரூபன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவின் பேரிலும், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் பரிந்துரையின் பேரில், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,வில் நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதன்படி, திண்டிவனம் நகர அ.தி.மு.க.,செயலாளராக பதவி வகித்து வந்த தீனதாயளன், விழுப்புரம் மாவட்ட அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இதேபோல் நகர ஜெ.,பேரவை செயலாளராக இருந்த ரூபன்ராஜ், திண்டிவனம் நகர அ.தி.மு.க.,செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட அவைத்தலைவராக இருந்து வந்த செஞ்சியை சேர்ந்த கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராகவும், . செஞ்சி நகர செயலாளராக சுந்தர்ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கடுத்து, திண்டிவனம் நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளராக இருந்து வந்த உதயகுமார், நகர ஜெ.,பேரவை செயலாளராகவும், வழக்கறிஞர் சவுகத் அலி நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டிவனம் நகர செயலாளராக நியமிக்கப்பட்ட ரூபன்ராஜ், மாவட்ட செயலாளர் சண்முகத்திடம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி