உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி நாளை துவக்கம்

 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி நாளை துவக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை துவங்குகிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதல் நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், இலவச பாடத்திட்ட தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் இங்கு நடந்தது. இந்த வகுப்பில் பயிற்சி பெற்ற 193 மாணவர்களில் 125 பேர், தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடக்கும் இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று தற்போது வரை 400க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர். இந்த மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை 20ம் தேதி காலை 10:00 மணி முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை