| ADDED : நவ 19, 2025 07:06 AM
மயிலம்: வீடு தொண்டு நிறுவனம் சார்பில் ஊராட்சி மகளிர் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. மயிலம், ஒலக்கூர், வல்லம், வானுார் ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வீடு தொண்டு நிறுவன நிர்வாக பொறுப்பாளர் விக்டோரியா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக டான் பாஸ்கோவின் இயக்குநர் ஜான் கிறிஸ்டோபர், திண்டிவனம் அனைத்து மகளிர் சப் இன்ஸ்பெக்டர் பவித்ரா, மயிலம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேட்டு, திட்ட ஒருங்கிணைப்பாளர் தென்னரசு ஆகியோர் வாழ்த்தி பேசினர். பங்கேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாலின சமத்துவம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் உள்ளாட்சி நிர்வாக முறைகள் குறித்த பயிற்சியை சரண்ராஜ் அளித்தார். பயிற்சியை ஜெயபாரதி, தவமணி, மணிமேகலை, ஏழுமலை, சரத்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.