உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேர்தல் நியமன அலுவலர்களுக்கான பயிற்சி

தேர்தல் நியமன அலுவலர்களுக்கான பயிற்சி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா பொதுத் தேர்தல் குறித்து, தேர்தல் நியமன அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் (கலெக்டர்) பழனி தலைமை தாங்கி, பேசியதாவது: லோக்சபா பொதுத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.நியமன அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடங்களை அடையாளம் காணுவதோடு, வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு, பயிற்சி அளிக்கும் தேதி, இடம் மற்றும் தளவாடங்கள் குறித்து முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி பணியாளர்கள் பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்வதையும், நியமன அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.வாக்குச் சாவடி பணியாளர்களுக்கு மைக்ரோ லெவல் பயிற்சி அவசியம். பயிற்சி வகுப்பறையில் புரொஜெக்டர்கள், வீடியோக்கள், பயிற்சி தொடர்பான கையேடுகள் மற்றும் பயிற்சிப் பொருட்கள் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும். பயிற்சியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வருகையை நியமன அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,க்கள் பரமேஸ்வரி, சரஸ்வதி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், ஆர்.டி.ஓ., காஜாசாகுல்ஹமீது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி