| ADDED : டிச 10, 2025 06:16 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, சேர்மேன் ஓம் சிவசக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன், பி.டி.ஓ.,க்கள் முல்லை, பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். அலுவலக கணக்காளர் சிலம்பரசன் தீர்மானம் வாசித்தார். கூட்டத்தில் குடிநீர், சாலை, மின்விளக்கு அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை பி.டி.ஓ.,க்கள், பணி மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். துணை பி.டி.ஓ பிரபாகரன் நன்றி கூறினார்.