மேலும் செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்
18-Aug-2025
விழுப்புரம்; வைகுண்டவாச பெருமாள் கோவில் உறியடி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வைகுண்டவாச பெருமாள், தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:30 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடந்தது.
18-Aug-2025