உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரம் நகர தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் திறப்பு

 விழுப்புரம் நகர தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் - திருச்சி சாலை வழுதரெட்டி பகுதியில் இயங்கி வந்த உதவி மின் பொறியாளர் (நகரம் தெற்கு) பிரிவு அலுவலகம், நிர்வாக காரணங்களால் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, விழுப்புரம் கலைஞர் நகர் அடுத்த திருவள்ளுவர் சாலை, சாலாமேடு ஸ்ரீனிவாசா நகர் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் நேற்று திறப்பு விழா நடந்தது. செயற் பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமை தாங்கி திறந்து வைத்தார். உதவி மின் பொறியாளர்கள் ரமேஷ் மற்றும் மின்துறை அலுவலர்கள், நுகர்வோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை