உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கள்ளக்குறிச்சி கிராம பகுதிகளில் பூட்டியே கிடக்கும் நூலகங்கள்

கள்ளக்குறிச்சி கிராம பகுதிகளில் பூட்டியே கிடக்கும் நூலகங்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் திறப்பு விழா செய்த பின்னரும் பல இடங்களில் நூலகங்கள் பூட்டியே கிடக்கின்றன. இவற்றை திறப்பதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த எலியத்தூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு தனியார் பள்ளியும், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியும் அமைந்துள் ளது. விவசாயம், கூலி வேலை செய்து வரும் கிராம மக்களின் கல்வி அறிவு மேம்பாட்டிற்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கடந்த 2009-10ம் ஆண்டு 3.30 லட்சம் ரூபாய் மதிப்பில் நூலக கட்டடம் கட்டப்பட்டது. நூலகத்தில் அறிவியல், ஆன்மிகம் சார்ந்த கதைகள், கட்டுரைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆங்கில அறிவுத் திறனை வளர்க்கும் பல்வேறு வகையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நூலகத்திற்கு தினசரி நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் வருகின்றது. இந்த நூலக கட்டடம் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. நூலகம் திறப்பு விழா முடிந்து எட்டு மாதங்களாகியும், இடையில் சுத்தம் செய்வதற்காக ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டது. நூலக கட்டடத்தின் முன்பக்க ஜன்னல் திறந்தே கிடப்பதால் பலத்த மழையின் போது பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மழை சாரலில் நனைந்து வீணாகி வருகின்றது. இதே போல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வரதப்பனூர், பைத்தந்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த நூலகங்கள் நிரந்தரமாக பூட்டியே கிடக்கின்றது. இதனால் நூலகங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பயனற்று கிடக்கின்றது. கிராம மக்களின் கல்வி அறிவுக்காக கொண்டு வரப்பட்ட நூலக கட்டடங்களை திறந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை