உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனை

போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனை

விழுப்புரம் : விழுப்புரத்தில் போக்குவரத்து போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். விழுப்புரம் பகுதியில் தொடர் வாகனங்கள் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இதனையடுத்து டவுன் டி.எஸ்.பி., சேகர் உத்தரவின் பேரில் விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் போலீசார் நேற்று காலை திடீர் வாகன சோதனை நடத்தினர். அந்த வழியே சென்ற மோட்டார் சைக்கிள்கள், கார்கள், ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி வாகன உரிமம், ஓட்டுனர் லைசென்ஸ், பர்மிட், வாகன வரி குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை