உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனந்தபுரம்-பனமலை சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம்

அனந்தபுரம்-பனமலை சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளம்

செஞ்சி : அனந்தபுரம்-பனமலை சாலையில் ஏரி தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்வாங்கி ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. செஞ்சி தாலுகா அனந்தபுரத்தில் இருந்து பனமலை செல்லும் சாலையில் தாளகிரீஸ்வரர் கோவில் அருகே ஏரிவாய்க்கால் உள்ளது. இந்த ஏரி வாய்க்காலின் ஒரு பகுதியில் இருந்து ரோட்டின் மறுபுறம் தண்ணீர் செல்ல குழாய்கள் அமைத்துள்ளனர். நீண்ட நாட்கள் ஆனதால் இந்த குழாய்கள் உடைந்து சாலையின் இரண்டு பக்கமும் பலவீனமடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு பகுதி குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்தனர். தற்போது மேற்கு பக்கமும் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. இந்த உடைப்பு ஏற்பட்டுள்ள இடம் திருப்பமாக இருப்பதால் இரவில் வேகமாக வரும் வாகனங்கள் பள்ளம் தெரியாமல் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்ய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை