உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் பட்டியல் திருத்த பணி தி.மு.க., தொகுதி பார்வையாளர் ஆய்வு

 வாக்காளர் பட்டியல் திருத்த பணி தி.மு.க., தொகுதி பார்வையாளர் ஆய்வு

செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை தி.மு.க., தொகுதி பார்வையாளர் ஆய்வு செய்தார். செஞ்சி ஒன்றியம் மீனம்பூர், பள்ளியம்பட்டு, கோணை, அப்பம்பட்டு, கணக்கன்குப்பம், கெங்கவரம், ஆலம்பூண்டி மற்றும் அனந்தபுரம் பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை தி.மு.க., தொகுதி பார்வையாளர் கார்த்திகேயன், ஒன்றிய சேர்மன் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கிருந்த தி.மு.க., நிர்வாகிகள், பாகமுகவர்கள், டிஜிட்டல் முகவர்களிடம் இதுவரை வழங்கப்பட்டுள்ள படிவங்களின் நிலை குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், அவைத் தலைவர் டாக்டர் கல்யாண் குமார், ஒன்றிய அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய பொருளாளர் இக்பால், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி