உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வீரணாமூரில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை பயிற்சி முகாம்

 வீரணாமூரில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை பயிற்சி முகாம்

செஞ்சி: வீரணாமூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் வல்லம் ஒன்றியம் வீரணாமூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் நீர் மேலாண்மை தொழில்நுட்பம் பற்றி பேராசிரியர்கள் ஆனந்தி, விஜய கீதா ஆகியோரும், வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், முனைவர் சிபி செபாஸ்டின், செந்தமிழ் ஆகியோர் கோழி வளர்ப்பு முறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். விவசாயிகளுக்கு தென்னை, மாங்கன்றுகள், உயிர் உரங்கள், மற்றும் கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்பட்டன. 70 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை