விக்கிரவாண்டி: வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீடூர் அணை உள்ளது. மொத்த கொள்ளளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி), தற்போது 30.350 அடி (475.752 மில்லியன் கன அடி) தண்ணீர் நிரம்பி உள்ளது. அதையடுத்து, திண்டிவனம், வானுார் பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் 2025-2026ம் ஆண்டு பாசனத்திற்காக அணையில் இருந்து நேற்று முதல் வரும் 2026ம் ஆண்டு ஏப்., 2 வரை 135 நாட்களுக்கு 328.350 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு செயலர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, நேற்று பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி தண்ணீர் திறந்து வைத்தார். தரணிவேந்தன் எம்.பி., மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். வரும் 15 நாட்களுக்கு தினமும் 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 2200 ஏக்கர், புதுச்சேரியில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மகான் தெரிவித்தார். நிக ழ்ச்சியில் சப் கலெக்டர் (பயிற்சி) கதிர்செல்வி, செயற்பொறியாளர் அருணகிரி, புதுச்சேரி மாநில செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர்கள் பாபு, மோகன்ராஜ், சதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன், துணைச் சேர்மன் புனிதா, ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி தமிழரசன், மாவட்ட தலைவர் டாக்டர் சேகர் பங்கேற்றனர்.