உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

 குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் காட்சி பொருளாக காணப்படும் மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனுார் அடுத்த அவலுார்பேட்டை கிராமத்தில் வாரத்திற்கு ஒரு முறை தான் ஊராட்சி நிர்வாகம் தெருக்குழாய் மூலம் நீர் சப்ளை செய்கிறது. இதனால் அத்தியாவசிய அவசர தேவைகளுக்காக சாமூண்டீஸ்வரி அம்மன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மினி சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த 6 மாதமாக பழுதடைந்த குடிநீர் தொட்டி காட்சி பொருளாக புதர்கள் மண்டிக்கிடக்கிறது. பழுதடைந்த மினி சின்டெக்ஸ் தொட்டியை சீரமைத்து தண்ணீர் கிடைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை