உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  துாக்கு போட்டு பெண் தற்கொலை

 துாக்கு போட்டு பெண் தற்கொலை

திண்டிவனம்: திண்டிவனத்தில் தனி மையில் வசித்து வந்த பெண் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் வி சாரித்து வருகின்றனர். திண்டிவனம், சஞ்சீவிரா யன்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன் மனைவி உமா, 40; இவரது மகள் நித்யா. திருமணமாகி சென் னையில் வசித்து வருகிறார். இதனால் உமா தனியாக வீட்டு வேலை செய்தும், இட்லி கடை நடத்தியும் வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக பூட்டியிருந்த உமா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் திண்டிவனம் டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் கவுதமன் மற்றும் போலீசார், நேரில் வந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது உமா துாக்குப்போட்டு உடல் அழுகிய நிலையில் இறந்திருப்பது தெரியவந்தது. நித்யா அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை