உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மகளிர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

 மகளிர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

விழுப்புரம்: திண்டிவனத்தில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் இன்று நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் இன்று 22ம் தேதி திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருந்தது. நிர்வாக காரணங்களால் மறு தேதி அறிவிக்கப்படாமல் இம்முகாம் ஒத்திவைக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு முகாமிற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி