உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக்கிரமிப்பில் பிளக்ஸ் போர்டுகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆக்கிரமிப்பில் பிளக்ஸ் போர்டுகள்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு பிளக்ஸ் போர்டுகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இங்குள்ள காந்திசிலை, பழைய பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ரோடு, நேருசிலை அருகே என முக்கியமான இடங்களில் அனுமதி இன்றி பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன. விபத்து அபாயம் குறித்து, போர்டு வைக்கும் கட்சிகள், அமைப்புகள் கண்டுகொள்வதில்லை. தற்போது காற்றுகாலம் என்பதால் பாதசாரிகள் மீது சாய்ந்தால் விபரீதம் ஏற்படும் நிலை உள்ளது. ரோட்டில் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. நகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பிளக்ஸ் போர்டுகளை அகற்ற முன் வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ