உள்ளூர் செய்திகள்

மின் ஊழியர்பலி

சிவகாசி : திருத்தங்கலை சேர்ந்தவர் லாசர் ரஸ்(45). சிவகாசி நகர் கிழக்கு பிரிவு மின்வாரியத்தில் மஸ்தூராக வேலை செய்தார். சிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியில் உள்ள மின் கம்பத்தில் வேலை செய்தபோது, கம்பியில் உட்கார்ந்தபடி சாய்ந்தார். சக ஊழியர்கள் மின்கம்பம் மேலே ஏறி பார்த்த போது மயங்கிய நிலையில் இருந்தார். கயிறால் கீழே இறக்கி சிவகாசி அரசு ஆஸ்பத்திரி சேரத்தனர். பரிசோதித்த டாக்டர் மரணம் அடைந்ததாக தெரிவித்தார். மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் என கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ