| ADDED : ஆக 02, 2024 06:41 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் இறைச்சி, கோழி கடைகாரர்கள் கழிவுகளை வாறுகாலில் கொட்டுவதால் நகரில் சுகாதார கேடு ஏற்படுகிறது.அருப்புக்கோட்டையில் 50 க்கும் மேற்பட்ட இறைச்சி, மீன், கோழி கடைகள் உள்ளன. ஆடு, கோழிகளை வெட்டிய பிறகு, உள்ள கழிவுகளை ஒரு பாலீத்தின் பையில் போட்டு நகராட்சி குப்பை வண்டியில் தான் போட வேண்டும் என்று அனைத்து கடைகாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறைச்சி கழிவுகளை வாங்குவதற்கு என்று தனியாக ஒரு வாகனம் நகராட்சி சுகாதார பிரிவு மூலம் இயங்கி வருகிறது. வாகனம் வரும் போது கழிவுகளை இதில் கொட்ட வேண்டும்.ஒரு சில கடைகாரர்களை தவிர, மற்றவர்கள் கழிவுகளை வாறுகாலிலும், குப்பை தொட்டியிலும், ரோடு ஓரங்களிலும் கொட்டுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் எடுப்பதுடன் சுகாதார கேடாகவும் உள்ளது.இதுகுறித்து, நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி கூறியதாவது: நகரில் இறைச்சி, கோழி கழிவுகளை வாங்க நகராட்சி மூலம் வாகன வசதி உள்ளது. இதில் கழிவுகளை கொட்டாமல், வாறுகால், ரோடு ஓரங்களில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும்.---