| ADDED : ஜூன் 02, 2024 03:18 AM
விருதுநகர்: ராஜபாளையம் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த சந்திரசேகர் 59, வீ்ட்டில் ஏப். 13 ல் திருடு போன 59 பவுன் நகை, ரூ. 50 ஆயிரத்தை விரைந்து மீட்டு திருடர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.ராஜபாளையம் ராஜிவ்காந்திநகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின் வீட்டில் மே 13 ல் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 59 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் திருடு போனது. இதில் ஈடுபட்ட திருச்சி காவல்காரன்பட்டியைச் சேர்ந்த முத்துச்சாமி 32, வெம்பக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் 38, இருவரும் ஈடுபட்டது தெரிந்தது.இவர்களிடம் ஏப். 16 ல் 59 பவுன் நகை, ரூ. 50 ஆயிரத்தை தனிப்படை எஸ்.ஐ., சக்திகுமார், எஸ்.எஸ்.ஐ., கோபாலகிருஷ்ணன், முத்துகாண்டியார், போலீசார் இளங்கோ, பாலகுமார், காளிதாசன், கணேசன், சந்தோஸ், பாலாஜி, ராமதிலகம் ஆகியோர் பறிமுதல் செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் விரைவாக திருடர்களை கைது செய்த போலீசாரை எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா நேரில் அழைத்து பாராட்டினார்.