உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடியும் நிலையிலுள்ள கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடை

இடியும் நிலையிலுள்ள கட்டடத்தில் செயல்படும் ரேஷன் கடை

காரியாபட்டி : இடியும் நிலையிலுள்ள பழைய பள்ளி கட்டடத்தில்ரேஷன் கடை இயங்கி வருவதால் நுகர்வோர்கள் அச்சத்தில் உள்ளனர். காரியாபட்டி டி.கடமங்குளத்தில் ரேஷன் கடை கட்டடம் படு மோசமாகஇருந்தது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்கிறஅச்சத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடை இடிக்கப்பட்டது. செயல்படுத்த முடியாத நிலையில் இருந்த பழைய பள்ளி கட்டடத்தில் தற்போது ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கட்டடமும் படுமோசமாக இருப்பதால் பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர் அச்சத்துடன் காணப்படுகின்றனர். மழைக்காலத்தில் மழை நீர் கசிவு ஏற்பட்டு பொருட்கள் பாதிக்கப்படுகிறது. அவ்வப்போது மேற்கூரை இடிந்து விழுந்து பொருட்களில் கற்கள் விழுகின்றன. இதனை நுகர்வோர் வாங்கி பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. ரேஷன் பொருட்கள், நுகர்வோர்கள், விற்பனையாளரின் நலனை கருத்தில் கொண்டு புதிய ரேஷன் கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ