உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 10 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை

10 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராத ரேஷன் கடை

சிவகாசி : சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி இந்திரா நகரில் ரேஷன் கடை கட்டி 10 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் இப்பகுதி மக்கள் வேறு ஊராட்சியில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கும் நிலை உள்ளது.சிவகாசி இந்திரா நகரில் 280 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதி மக்கள் எளிதில் ரேஷன் பொருட்களை பெறுவதற்காக இந்திரா நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 7.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்ட நாளிலிருந்து இந்த கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே இக்கட்டடம் சேதம் அடைந்து வருவதோடு சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர்.இதனால் இந்திரா நகர் மக்கள் விஸ்வநத்தம் ஊராட்சி முனீஸ்வரன் காலனியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குகின்றனர். இரண்டு கிலோமீட்டர் துாரம் உள்ள அங்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருவதற்கு வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே இந்திரா நகரில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.வார்டு உறுப்பினர் வைரம் கூறுகையில், இப்பகுதி மக்களுக்கு என தனியாக ரேஷன் கடைக்கு கட்டடம் கட்டியும் பயன்பாட்டில் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ