உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பரிசீலனையில்  34 வேட்புமனுக்கள் ஏற்பு 

பரிசீலனையில்  34 வேட்புமனுக்கள் ஏற்பு 

விருதுநகர் : விருதுநகர் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனையில் 27மனுக்கள் ஏற்கப்பட்டு 14மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.மார்ச் 20 முதல் 27 வரை 34 வேட்பாளர்கள் 41 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் பிரதான கட்சி வேட்பாளர்கள் இரண்டு முதல் நான்கு மனு வரை கூடுதலாக தாக்கல் செய்தனர். நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் பா.ஜ., வேட்பாளர் ராதிகா, மாற்று வேட்பாளர் சரத்குமார், காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தே.மு.தி.க., விஜயபிரபாகரன், நாம் தமிழர் கவுசிக் உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் உள்ளிட்ட 27 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதில்அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 4,அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 4,சுயேச்சை 19 ஆகும். 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.வாபஸ் பெற கடைசி நாள் நாளை மறுநாள் (மார்ச் 30).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்