| ADDED : ஆக 06, 2024 04:26 AM
விருதுநகர்: விருதுநகரில் முக்கிய வீதிகளில் காலை, மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தாததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விருதுநகரை சுற்றிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மதுரை ரோடு, ராமமூர்த்தி, மார்கெட் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், அருப்புக்கோட்டை முக்கு ரோடு, புல்லலக்கோட்டை, ரோசல்பட்டி ரோடுகள் வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணியாளர்கள், வீடுகள், உணவகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வருபவர்கள், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு என தினமும் பலரும் வந்து செல்கின்றனர்.இப்படி வருபவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை ஒழுங்குப்படுத்த போதிய போலீசார் இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். மேலும் சில சமயங்களில் ஆம்புலன்ஸ் தொடர்ந்து செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.இது போன்ற சமயத்தில் சிகிச்சைக்காக செல்பவர்கள் பாதிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளது. போக்குவரத்து போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து போக்குவரத்து நெரிசல்களை ஒழுங்குப்படுத்துவதற்கான போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.