மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
7 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
7 hour(s) ago
விருதுநகர் : மின் மேற்பார்வை பொறியாளர் லதா கூறியதாவது: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் ஜூலை 1 முதல் உயர், தாழ்வழுத்த மின் பாதைகளுக்கு அருகே உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துதல், தாழ்வாக செல்லும் மின்வயர்களை உயர்த்தி கட்டுதல், சாய்ந்த மின்கம்பங்களை நேர் செய்தல், பலவீனமான இன்சுலேட்டர், ஜம்பர்களை புதுப்பித்தல் போன்ற பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆக. 12, 13 தேதிகளில் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கும், மின்கம்பிகளை உயரத்தை கூட்ட, புதிய மின்கம்பம் இடை செருகல் செய்வதற்கு என சிறப்பு மேளா அறிவுறுத்தப்பட்டு 157 சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 91 புதிய மின்கம்பங்கள் நிறுவப்பட்டு தாழ்வாக செல்லும் மின்பாதைகள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதிலும் கடந்த ஜூலை 1 முதல் இதுவரை 840 சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டும் 448 புதிய மின்கம்பங்கள் இடைசெருகல் செய்யப்பட்டும் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது, என்றார்.
7 hour(s) ago
7 hour(s) ago