உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க எதிர்பார்ப்பு

சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க எதிர்பார்ப்பு

சாத்துார் : சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை திறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர் சென்று வருகின்றனர். இதனால் காலை மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் டிக்கெட் எடுக்கும் நிலை உள்ளது.ஒரே டிக்கெட் கவுண்டரில் பொதுப் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளும் தட்கல், முன்பதிவு செய்ய டிக்கெட் எடுப்பவர்களும் நின்று டிக்கெட் பெற வேண்டிய நிலை உள்ளது.வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மிக அதிக அளவில் பயணிகள் ரயில்வே ஸ்டேஷன் வருகின்றனர். இது போன்ற நாட்களில் பொதுப் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் போவதால் ரயில்களை தவறவிடும் சம்பவம் நடக்கிறது.சிலர் டிக்கெட் எடுக்காமல் பொதுப் பெட்டியில் ஏறி அபராதம் கட்டும் நிலை ஏற்படுகிறது. தட்கல், முன்பதிவு செய்து டிக்கெட் எடுக்க வரும் பயணிகளும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு கவுன்டர்கள் மூலம் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ