மேலும் செய்திகள்
அரளி பூக்கள் கிலோ ரூ.350க்கு விற்பனை
16-Aug-2024
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நான்கு வழிச்சாலைகளில் ஹைபீம் ஓளியால் எதிரே வரும் வாகனங்களை திணறடிக்கும் சூழலை தடுக்க சீரான வரிசையில் அரளி செடி நடவு செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் துாத்துக்குடியில் இருந்து மதுரைக்கும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும் என இரண்டு நான்கு வழிச்சாலைகள் செல்கின்றன.துாத்துக்குடி நான்கு வழிச்சாலை காரியாபட்டி, ஆவியூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை கடந்து செல்கின்றன. கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை விருதுநகர், சாத்துாரை கடந்து செல்கின்றன. விருதுநகர், சாத்துாரை பொறுத்தவரையில் கிராமப்புறங்களை பிரித்து மையத்தில் நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்நிலையில் இதன் சென்டர் மீடியன்களில் வைக்கப்படும் அரளி செடிகள் சீரற்ற முறையில் இடைவெளி விட்டு வைக்கப்பட்டுள்ளது.இதே நிலை தான் துாத்துக்குடி நான்கு வழிச்சாலையிலும் உள்ளது. நான்கு வழிச்சாலையில் தெருவிளக்கு வசதி இல்லாததாலும், முக்கிய வளைவுகளில் கடக்கும் போதும், வணிக போக்குவரத்துக்கான கனரக வாகனங்கள் இரவு போக்குவரத்தை பயன்படுத்துவதாலும் வாகனங்களில் ஹைபீம் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. சாலை விதிகளின் படி இதை பயன்படுத்த கூடாது.இந்த விளக்குகளை பயன்படுத்தும் போது எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண்கள் கூசுவதுடன் வாகனத்தை ஓட்டும் போது கட்டுபாட்டை இழக்கும் சூழல் உள்ளது. ஆகவே ஹைபீம் விளக்குகளால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக தொலைதுார பயணம் செய்யும்நான்கு வழிச்சாலைகளில் சென்டர் மீடியன் தடுப்புகளில் அரளி செடிகள் வைக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வைக்கப்படுகின்றன.இதில் வடமாவட்டங்களில் தொடர்ந்து அரளி செடிகள், பிற வகை செடிகள் காணப்படுகின்றன. தென்மாவட்டங்கள் என வரும் போது சீரற்ற முறையில் அரளி செடிகள் நடப்பட்டுள்ளன. இதனால் ஹைபீம் ஒளியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஓராண்டுக்கு முன் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை நெடுஞ்சாலை ஆணையம் நட்டது. இருப்பினும் பல்வேறு இடங்களில் இடைவெளிகள் காணப்படுகின்றன. ஒரே சீராக அரளி செடிகளை நட்டு விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16-Aug-2024