உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களுக்கு செயல் அலுவலர்கள் நியமனம்

ஸ்ரீவில்லிபுத்துார் கோயில்களுக்கு செயல் அலுவலர்கள் நியமனம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், வைத்தியநாத சுவாமி கோயில்களுக்கு புதிய செயல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.வைத்தியநாத சுவாமி கோயிலில் கூடுதல் பொறுப்பாக பணியாற்றும் ஆய்வாளர் முத்து மணிகண்டன் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பணியாற்றும் செயல் அலுவலர் ரேவதி நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல் ஆண்டாள் கோயிலுக்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்ட சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் செயல் அலுவலர் லட்சுமணன் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் முதல் நிலை செயல் அலுவலராக பணியாற்றும் சக்கரையம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை