உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய முயற்சி

போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய முயற்சி

சிவகாசி,:சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள 1 ஏக்கர் 33 சென்ட் இடத்தை போலி ஆவணம் தயாரித்து பத்திர பதிவு செய்ய முயன்ற 3 பேரை சார்பதிவாளர் புகாரில் போலீசார் கைது செய்தனர். மேலும் பத்திர எழுத்தர், தரகர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிவகாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் செந்தில் ராஜ்குமார். பத்திரபதிவு அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் நடுவூரில் உள்ள 1 ஏக்கர் 33 சென்ட் நிலத்தை தான செட்டில்மெண்ட் செய்வதற்காக பத்திர எழுத்தர் வைரமுத்து மூலம் விண்ணப்பம் வந்துள்ளது. ஆவணத்தை சார் பதிவாளர் சரிபார்த்த போது, அந்த இடம் வேறொருவர்பெயரில் உள்ளதும், போலியாக வில்லங்கச் சான்று, போலி பட்டா தயாரித்து பத்திர பதிவுக்கு விண்ணப்பித்தது தெரியவந்தது.இதுகுறித்து சார் பதிவாளர் செந்தில் ராஜ்குமார்அளித்த புகாரில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த முத்தையா 62, அவரது சகோதரர்களான சிவகாசி விஸ்வ நத்தத்தை சேர்ந்த மாரிச்சாமி 64 , பாலு 62 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.பத்திர எழுத்தர் வைரமுத்து, தரகர் பூமிராஜ், பேராபட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், லிங்கபுரம் காலனியைச் சேர்ந்த தினேஷ்குமார், சித்துராஜபுத்தைச் சேர்ந்த வள்ளிகுமார் ஆகியோர் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை