உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிழிந்து தொங்கும் பேனர்கள், கம்பிகள்; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கிழிந்து தொங்கும் பேனர்கள், கம்பிகள்; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

விருதுநகர் : விருதுநகரில் கிழிந்து தொங்கும் பேனர்கள், கம்பிகளால் விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. அவற்றை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சரி செய்ய வேண்டும்.விருதுநகரில் தற்போது பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் அள்ளி வீசும் மணலால் வாகன ஓட்டிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் காற்றின் வேகம் தாங்காமல் ராட்சத பிளக்ஸில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிந்து தொங்குகின்றன. இதனால் அவற்றை சார்ந்துள்ள கம்பிகளும் வளைந்து நெளிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதே போல் டிராபிக் சிக்னல்களிலும் உயரே வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் கிழிந்து கம்பிகள் கீழே விழும் நிலையில் உள்ளன. இது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதே போல் கடந்த ஞாயிறில் மணிக்கூண்டு அருகே டிராபிக் கம்பம் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. காற்றில் இது போன்று ரோட்டில் உள்ளவை விழுவது வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதை சரி வர ஆய்வு செய்ய வேண்டும். அந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் ராட்சத பிளாக்ஸ் பேனர்களின் நிலை, டிராபிக் சிக்னல்களில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களின் நிலையை ஆராய வேண்டும். இல்லாவிட்டால் டிராபிக் கம்பம் முறிந்து சரிந்தது போன்ற நிலை தான் ஏற்படும். மனித உயிர்களில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அறிவுறுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை