உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்று மக்களுடன் முதல்வர் முகாம்கள்

இன்று மக்களுடன் முதல்வர் முகாம்கள்

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2ம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் ஜூலை 11 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் இணைய வழி விண்ணப்ப முறை எனில் சம்மந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய, அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்த விபரம் பெறுவதற்கு கலெக்டர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562- 252 742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ