| ADDED : ஜூன் 27, 2024 11:54 PM
சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சென்னை லாவெண்ட்டல் கன்சல்டன்டஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வளாகத் தேர்வில் மாணவர்கள் சந்தியா, மகேந்திரன், நர்மதா ஆகியோர் வெற்றி பெற்று ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு பெற்றனர். வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி, முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி, வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் காசிராஜன், சுதாகர், துறை தலைவர்கள்வளர்மதி, ராமதிலகம், பேராசிரியர்கள் பாராட்டினர். கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி கூறுகையில்,இந்த கல்வியாண்டில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் லீசக்சஸ் நிறுவனத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் இதுபோன்று அதிக சம்பளத்துடன் பன்னாட்டு நிறுவனங்களில் பணி அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு துறை செய்து வருகிறது, என்றார்.