| ADDED : ஜூன் 02, 2024 03:15 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கல் பாலம் சேதமடைந்து குழியாகி விட்டதால் பாலம் வழியாக 5 புறநகர் பகுதி மக்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.அருப்புக்கோட்டை நகராட்சி 34 வது வார்டை சேர்ந்த வெள்ளக்கோட்டை பகுதியில் உள்ளது கல்பாலம். இதன் வழியாகத்தான் அண்ணா நகர், சுப்புராஜ் நகர், ஜெயகாந்தன் நகர்,கஞ்ச நாயக்கன்பட்டி, பாரதிதாசன் தெரு உட்பட, பகுதி மக்கள் செல்வர். அவசரத்திற்கு 108 ஆம்புலன்ஸ் இந்த கல்பாலம் தெரு வழியாக செல்லும். நகராட்சி, தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை ஆகியவற்றிற்கு இதன் வழியாகத்தான் செல்வர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்பாலம் 10 நாட்களுக்கு முன்பு கனரக வாகனம் சென்றதில் பாலம் உடைந்து குழி ஆகிவிட்டது. இருசக்கர வாகனங்கள் கூட சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. வயதானவர்கள் இரவு நேரங்களில் தடுக்கி விழுகின்றனர். அவசரத்திற்கு ஆட்டோக்கள் உள்ளே வர முடியாதபடி உள்ளது. நகராட்சி நிர்வாகம் பாலத்தை சரி செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.