மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
4 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 hour(s) ago
சிவகாசி : சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி உசேன் காலனியில் இருந்து நாரணாபுரம் செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி உசேன் காலனியில் இருந்து 56 வீட்டு காலனி வழியாக நாரணாபுரம் 3 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. இப்பகுதியில் அச்சகம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ரோடு சேதம் அடைந்திருந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது.இந்நிலையில் புதிதாகப் போடப்பட்ட மூன்று ஆண்டுகளிலேயே இந்த ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதில் கனரக வாகனங்கள், டூவீலர்கள் சென்று வருவதில் பெரிது சிரமம் ஏற்படுகின்றது. மேலும் மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago