உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நடமாடும் வாகனங்களில் கன்று வாங்க வேண்டாம்

நடமாடும் வாகனங்களில் கன்று வாங்க வேண்டாம்

விருதுநகர்: விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா செய்திக்குறிப்பு: பழமர சாகுபடி செய்வதற்கு விவசாயிகள்பழமரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் வாங்குவதற்கு நர்சரிகளுக்கு செல்லும் போது பழ மரக்கன்றுகளின் உண்மை தன்மை அறிந்து வாங்க வேண்டும். குறிப்பாக கன்றுகளின் ரகம், பதியம் செய்த நாள், ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்டுஉள்ளதா அல்லது விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து வாங்க வேண்டும். நடமாடும் வாகனம் மூலம் விற்பனைக்கு வரும் கன்றுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வாங்கும் கன்றுகளின் உண்மை தன்மை அறிய இயலாது. எனவே அரசு கண்காணிப்பில் உளள அரசு உரிமம் பெற்ற நர்சரிகளில் மட்டுமே வாங்க வேண்டும். விற்பனை ரசீது நர்சரி உரிமையாளர்களிடம் இருந்து கேட்டு பெற வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை