உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் பாலங்களில் துார்வாரும் பணி தீவிரம்

மாவட்டத்தில் பாலங்களில் துார்வாரும் பணி தீவிரம்

விருதுநகர் : மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் சாலை போக்குவரத்துக்கும், மக்களுக்கும் எவ்விதமான சிரமம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் உள்ள பெரிய, சிறிய பாலங்களை துார்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ரோட்டில் உள்ள அனைத்து குழாய், கான்கிரீட் பாலங்கள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் துார்வாரப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வத்திராயிருப்பு - மகாராஜபுரம் -அழகாபுரி- விருதுநகர் நெடுஞ்சாலையிலும், ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி -விருதுநகர் -அருப்புக்கோட்டை -திருச்சுழி-நரிக்குடி- பார்த்திபனுார் நெடுஞ்சாலையிலும் உள்ள கான்கிரீட், குழாய் பாலங்கள் துார்வாரும் பணி வேக வேகமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ