உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தெரு நடைபாதையில் குடிநீர் பகிர்மான குழாய்

தெரு நடைபாதையில் குடிநீர் பகிர்மான குழாய்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கிராமத்தில் குடிநீர் பகிர்மான குழாயை தெருவில் நடைபாதையில் பதித்துள்ளதால் நடந்து செல்பவர்கள் தடுக்கி விழுகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கட்டங்குடி ஊராட்சி. இதில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக தெருக்களில் பகிர்மான குழாய் பதிக்கும் பணி 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. வடக்கு தெரு உட்பட தெருக்களில் பகிர்மான குழாயை நடைபாதையின் ஓரங்களில் பதிக்காமல், தெருவிலேயே தரமற்று முறையில் கடமைக்கு பதித்துள்ளனர். இதனால் குறுகிய தெருவாக இருப்பதால், இரவு நேரங்களில் முதியோர் நடக்கும் போது, குழாயில் தடுக்கி விழுகின்றனர். டூ வீலர்களில் செல்லும் போது வழுக்கி விடுவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். குழாய்கள் பொருத்தப்பட்ட இணைப்புகளில் தண்ணீர் 'லீக்' ஆகி வருகிறது, கனரக வாகனங்கள் தெருவில் வந்தால் குழாய்கள் நசுங்கிவிடும் நிலையில் உள்ளது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி தரமற்ற முறையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து தரமாக நீண்ட காலம் உழைக்கும் வகையில் குழாய்களை பதிக்க அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை