உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நெல் கொள்முதலை அதிகப்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

நெல் கொள்முதலை அதிகப்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு

சேத்துார்: சேத்துார் அருகே தேவதானத்தில் அறுவடை பணிகள் வேகமெடுத்து வருவதால் கூடுதல் இயந்திரம் அமைத்து நெல் கொள்முதலை அதிகப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் நீர் ஆதாரத்தை வைத்து தேவதானம் சுற்றுப்பகுதிகளில் 3000க்கும் அதிகமான ஏக்கர் நெல் சாகுபடி நடை பெறுகிறது. இந்த ஆண்டு தேவதானம் பகுதியில் மே. 23ல் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு தினமும் 800 மூடை அளவிற்கு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து வந்தனர்.தற்போது இப்பகுதியில் 20 அறுவடை மிஷின்கள் முகாமிட்டு தினமும் 80 ஏக்கருக்கு அதிகமாக அறுப்பு நடந்து வருகிறது. இதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால் மழை உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக வியாபாரிகளை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் கொள்முதலை அதிகப்படுத்த மற்றொரு இயந்திரம் அனுப்பி தீர்வு காண விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.இதுகுறித்து விவசாயி மாரிமுத்து: விவசாயிகள் கோரிக்கை படி உடனடியாக கொள்முதல் நிலையம் 10 நாட்கள் முன் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவடை பருவம் தொடங்கி மழை காரணமாக 15 நாட்களுக்கு மேல் அறுவடை தள்ளிப்போன சாகுபடி பயிர்கள் தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் தொடர் அறுவடை நடந்து வருகிறது.இதனால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை வைத்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு வழியின்றி தனியார் வியாபாரிகளை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயிரம் ஏக்கருக்கு அறுவடை செய்ய வேண்டிய நிலையில் கொள்முதலுக்கு கூடுதல் இயந்திரம் ஏற்பாடு செய்து விவசாயிகளுக்கான தாமதத்தை சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை