உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கண்மாய்களின் மதகுகள், ஷட்டர்களை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

கண்மாய்களின் மதகுகள், ஷட்டர்களை சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் : வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பு ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள அனைத்து கண்மாய்களின் மதகுகள், ஷட்டர்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் மம்சாபுரம் பகுதி கண்மாய்கள் நிரம்பி மறுகால் விழும் பட்சத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் உள்ள பெரியகுளம், மொட்டபெத்தான், வடமலைக்குறிச்சி, செங்குளம், ராஜகுலராமப்பேரி உட்பட பல்வேறு கண்மாய்க்கு வரும் வகையில் நீர்வரத்து பாதைகள் உள்ளன.கடந்த ஆண்டு கனமழை பெய்து நகரின் மேற்குப் பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பி, கிழக்கு பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் சென்றடைந்தது. இந்நிலையில் பல கண்மாய்களில் மதகுகள், ஷட்டர்கள் பழுதடைந்து தண்ணீர் சேகரித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கண்மாயில் மதகுகள் முறையாக பராமரிக்கமல் உடைப்பு ஏற்பட்டு, மழைநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடி வீணாகியது.எனவே, தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பு அனைத்து கண்மாய்களின் மதகுகள் ஷட்டர்களை சீரமைப்பது உடனடியாக சீரமைப்பது அவசியமாகிறது. இதுகுறித்து விவசாயி கோவிந்தராஜ் கூறியதாவது: தற்போது நகரின் மேற்குப் பகுதி கண்மாய்கள் மட்டுமின்றி கிழக்கு பகுதி கண்மாய்களுக்கு வரும் நீர் வரத்து பாதைகளில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதேபோல் அனைத்து கண்மாய்களின் மதகுகள், ஷட்டர்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனை வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பு சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை