உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குப்பைக்கு தீ: மரங்கள் சேதம்

குப்பைக்கு தீ: மரங்கள் சேதம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் ரோடு ஓரங்களில் குப்பைக்கு தீ வைப்பதால் அதன் அருகில் உள்ள மரங்களும் எரிகின்றன.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ஊரின் பல பகுதிகளில் குளுகுளு என மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. ரோட்டின் இரு ஓரங்களிலும், பொது இடங்களிலும் தன்னார்வலர்கள் மரங்களை வளர்த்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் ஊரில் சேகரிக்கப்படும் குப்பையை அந்தந்த இடங்களில் ரோடு ஓரங்களில் கொட்டுகின்றனர். கொட்டப்படும்குப்பையிலிருந்து விஷமிகள் தீ வைக்கின்றனர்.இதனால் தீ காற்றில் பரவி அருகில் உள்ள மரங்களும் கருகுகின்றன.தீ வைக்கும் செயல் அடிக்கடி நடப்பதால், மரங்கள் பாழாகுவதாகவும், ஊராட்சி நிர்வாகம் எதையும் கண்டு கொள்வதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்